அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மத்திய அரசின் சார்பாக அடையாள அட்டை மற்றும் ரூபாய் 5 லட்சத்திற்கான பிரதமரின் இலவச மருத்துவ காப்பீடு அட்டை 100 பேருக்கு வழங்கப்பட்டது.
தமிழகத்தில் பல மருத்துவ காப்பீட்டு திட்டங்கள் செயல் முறையில் இருந்து வரும் நிலையில் புதியதாக இந்தியாவின் பிரதமர் மோடி தனது நாட்டு மக்களுக்காக ஒரு மருத்துவ காப்பீட்டு திட்டத்தை ஆரம்பித்துள்ளார். இந்த திட்டத்தின் மூலமாக 50 கோடி மக்களுக்கும் பயன்பெற உள்ளனர். இந்த திட்டம் இந்தியாவில் உள்ள 50 கோடி மக்களுக்கு மருத்துவ காப்பீடு அளிக்கும் வகையில் ஆயுஷ்மான் பாரத் என்ற மருத்துவ காப்பீடு திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. இந்த திட்டத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
அடுத்ததாக இந்த திட்டத்தில் சேருபவர்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் பணம் இல்லாமல் சிகிச்சை அளிக்கப்படும். முக்கியமாக இந்த திட்டத்தில் சேருவதற்கு வயது வரம்பு மற்றும் நோயின் நிலை தேவை இல்லை. தற்போது இந்த திட்டத்திற்கான அட்டைகளை நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மத்திய அரசின் சார்பாக வழங்கப்பட்டு வருகின்றது. தற்போது கோவை மாவட்டத்தில் உள்ள சூலூர் நகரில் கண்ணம்பாளையம் பேரூராட்சியில் கேசரி ஹிந்து வாகினி என்ற அமைப்பு சார்பில் மருத்துவ காப்பீடு அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த திட்டத்தின் மூலமாக அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு மத்திய அரசின் நல வாரிய அடையாள அட்டை மற்றும் 5 லட்சம் ரூபாய்க்கான பிரதமரின் இலவச மருத்துவ காப்பீடு அட்டை 100 பேருக்கு வழங்கப்பட்டது.
இந்த விழாவில் கலந்து கொண்ட அதிகாரிகள் தெரிவித்ததாவது அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியத்தில் ஒன்றிணைத்து அவர்களின் விவரங்களை மத்திய அரசு சேகரித்து வருகின்றது. இதற்காகவே பிரத்தியேகமாக புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் தொழிலாளர்கள் தங்களது ஆதார் அட்டை நகல், வங்கி பாஸ்புக் நகல் போன்றவற்றுடன் மத்திய அரசின் இலவச மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சேர தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து காப்பீடு அட்டையை பெற்றுக்கொள்ளலாம். இந்தத் காப்பீடு அட்டையின் மூலமாக மருத்துவமனைகளில் ஐந்து லட்சம் ரூபாய் வரை இலவச காப்பீடு பெறலாம் என்று தெரிவித்துள்ளனர்.