பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா என்ற திட்டத்தின் கீழ் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்திய கடலோர காவல்படை கப்பல் இன்று தொடங்கி வைக்கப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடியின் மேக் இன் இந்தியா மற்றும் ஆத்ம நிற்பார் பாரத் என்ற திட்டத்தின் கீழ் ஆக உள்நாட்டில் உருவாக்கப்படுகின்ற அனைத்து பொருள்களையும் ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் குறிப்பாக நாட்டின் பாதுகாப்பு படைக்கு தேவையான பொருள்களின் உற்பத்திக்கு மிக அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அதனால் புதிய கண்டுபிடிப்புகள், உள்நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், தொழில் வளம் போன்றவை மேம்படும்.
அதன் ஒரு முக்கிய பகுதியாக கடல்வழி பாதுகாப்பில் முக்கியப் பங்காற்றும் கப்பல்களை வடிவமைக்கும் பணியானது உள்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. அதன்படி எல் அண்டு டி சூரத் என்ற நிறுவனத்தின் சார்பாக உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட மற்றும் கட்டப்பட்ட இந்திய கடலோர காவல்படை கப்பல் சி -452 என்று தொடங்கி வைக்கப்பட உள்ளது. அதனை கடலோர காவல் படையின் தளபதி ராஜன் பர்கோத்ரா வீடியோ கான்பரன்ஸ் மூலமாக இன்று திறந்துவைக்க உள்ளார்.