பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்திற்கு விண்ணப்பித்து உங்களுக்கு வீடு இன்னும் கிடைக்கவில்லை என்றால் இவ்வாறு புகார் அளிக்கலாம். இந்தியாவில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய மக்களுக்கு அரசாங்கம் வீடுகளை வழங்கி வருகிறது.கடந்த 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் கீழ் குடிசை பகுதிகள் மற்றும் கட்சா வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு 2022 ஆம் ஆண்டுக்குள் வீடு வழங்க அரசு முடிவு செய்திருந்தது.
அதனால் இந்த திட்டத்தின் கீழ் மானிய வசதி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தில் 2.67 லட்சம் மானியமும், ஊரக வீட்டு வசதி திட்டத்தில் 1.67 லட்சம் மானியமும் வழங்கப்படுகின்றது. இந்தத் திட்டத்தில் மூன்று லட்சத்திற்கும் குறைவான வருமானம் உள்ளவர்கள் மற்றும் வீடு இல்லாதவர்கள் பயன்பெற முடியும். இந்தத் திட்டத்தில் மூன்று தவணைகளில் பணம் வழங்கப்படுகிறது. இதில் உங்களுக்கு ஏதேனும் சிக்கல் இருந்தால் அதை எளிதில் தீர்த்துக் கொள்ளலாம்.
மாநில அளவிலான கட்டணமில்லா எண்: 1800-345-6527
கிராமப்புறம்: 1800-11-6446
நகர்ப்புறம்: 1800-11-3377, 1800- 11-3388
உங்கள் புகார் பதிவு செய்யப்படும் போது அதற்கு 45 நாட்களுக்குள் தீர்க்கப்படும்.