வருடத்திற்கு ஒருமுறை பிரதமர் மோடி தனக்கு கிடைக்கும் பரிசு பொருட்களை ஏலம் விடுவது வழக்கம். அப்படி ஏல விற்பனை செய்து அதன் மூலமாக கிடைக்கும் தொகையினை பெண் குழந்தைகளின் கல்விக்காக செலவு செய்து வருகிறார். பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பல்வேறு விழாக்களில் கிடைக்கும் பரிசு பொருட்களை ஆன்லைன் முறையில் ஏலம் விடப்படுகிறது.
அந்த வகையில் இந்த வருடம் நடத்தப்பட்ட ஏலத்தில் பிரதமருக்கு பரிசாக கிடைத்த திருவள்ளுவர் சிலையையும், பட்டு வேஷ்டியையும் சேலம் அன்னதானபட்டியை சேர்ந்த பழைய இரும்பு கடை வியாபாரியான கார்த்திகேயன் என்பவர் 32 ஆயிரம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளார். இந்நிலையில் ஏலத்தில் எடுக்கப்பட்ட திருவள்ளுவர் சிலையையும், பட்டு வேஷ்டியையும் நேற்று சிவகார்த்திகேயனிடம் கொடுக்கப்பட்டது. இது பற்றி சிவகார்த்திகேயன் பேசியபோது, பிரதமர் பயன்படுத்திய பொருட்கள் தன்னுடைய வீட்டில் இருப்பது பெருமைக்குரிய விஷயம் என தெரிவித்துள்ளார்.