பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்து தேசிய புலனாய்வு முகமைக்கு இ-மெயில் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒபாமா, பில் கேட்ஸ் மற்றும் எலன் முஸ்க் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகள் கடந்த ஜூலை மாதம் ஒரே நேரத்தில் முடக்கப்பட்டன. அதற்கு பிட்காயின் எனப்படும் கம்ப்யூட்டர் வழி பணத்தை செய்யும் கும்பலே காரணம். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட டுவிட்டர் கணக்கு ஹேக்கர்களால் நேற்று திடீரென முடக்கப்பட்டது. அதன் பிறகு பல போராட்டங்களுக்குப் பின்னர் அவரின் ட்விட்டர் கணக்கு மீட்கப்பட்டதாக ட்விட்டர் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். மேலும் ஹேக்கர்களின் பதிவுகள் அனைத்தும் நீக்கப்பட்டு, மோடியின் பிட்டர் கணக்கு முழுவதுமாக சரி செய்யப்பட்டு விட்டது என அவர் கூறியுள்ளார்.
மோடியின் ட்விட்டர் கணக்கை 25 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின் தொடர்கின்றனர். இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்து தேசிய புலனாய்வு முகமைக்கு இ-மெயில் ஒன்று அனுப்பப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என்.ஐ.ஏ இ-மெயில் முகவரிக்கு கடந்த எட்டாம் தேதி என்று பிரதமர் மோடி விரைவில் கொலை செய்யப்பட வேண்டும் என்ற வாசகத்துடன் இ-மெயில் ஒன்று வந்திருந்தது. அதனால் பிரதமர் மோடியின் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் என எஸ்பிஜி பாதுகாப்பு படைக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்தது.
இந்த இமெயில் விவகாரத்தை விசாரணை செய்ய ‘ரா’, உளவுத் துறை உள்ளிட்ட பல்வேறு மூத்த அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. முதல் கட்ட விசாரணையில், இந்த இமெயில் வெளிநாட்டிலிருந்து வந்து உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் வருவது இது ஒன்றும் புதிதல்ல. இதற்கு முன்னதாக பல்வேறு முறை அதிக அளவு மிரட்டல்கள் வந்திருக்கின்றன. இருந்தாலும் தற்போது வந்துள்ள மிரட்டல் இ-மெயில் முற்றிலும் போலியான இமெயில் முகவரி என்பதால், பிரதமரின் நலனை கருத்தில் கொண்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது.