இந்திய அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை பிரதமர் மோடிக்கு அனுப்புவதற்காக ஆர்டர் செய்து இருப்பதாக காங்கிரஸ் கட்சி டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் 71வது குடியரசு தினம் நாடு முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடிக்கு இந்திய அரசியலமைப்பு சட்ட புத்தகம் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பு புத்தகம் முன்பதிவு செய்யப்பட்டதை தெரிவிக்கும் புகைப்படம் ஒன்றும் பதி விடப்பட்டுள்ளது. மேலும் அந்த பதிவில் அரசியலமைப்பு உங்களை விரைவில் வந்து சேரும் என்றும், நாட்டை துண்டாடுவதற்கு இடையே நேரம் கிடைக்கும் போது அந்த புத்தகத்தை தயவு செய்து படிக்கவும் என்றும் பதிவிட பட்டுள்ளது.