Categories
மாநில செய்திகள்

பிரதமருக்கு வழங்கிய பாதுகாப்பில் எவ்வித குறைபாடும் இல்லை…. டிஜிபி சைலேந்திரபாபு விளக்கம்….!!!!

பிரதமருக்கு வழங்கிய பாதுகாப்பில் எந்தவித குறைபாடும் இல்லை எனவும் தமிழக காவல்துறையில் நவீன தொழில்நுட்ப கருவிகளை தான் வைத்து இருக்கிறோம் என தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார். சென்னையில் தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, பிரதமரின் வருகையின் போது பாதுகாப்பு குறைபாடு இருந்ததாக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றசாட்டு முன் வைத்துள்ளது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த டிஜிபி சைலேந்திரபாபு, பிரதமர் வருகையின் போது பாதுகாப்பின் குளறுபடிகள் நடந்ததாக எந்தவிதமான தகவலும் இல்லை. நல்ல முறையில் பாதுகாப்பு இருந்தது.

அது தொடர்பாக எந்த தகவலும் பரிமாற்றங்களும் கிடையாது. ஆனால் ஒவ்வொரு வருடமும் தமிழக காவல்துறை பயன்படுத்தக்கூடிய அனைத்து விதமான உபகரணங்களும்,பாதுகாப்பு உபகரணங்கள் உட்பட அனைத்தும் என்ன நிலையில் இருக்கின்றது என்பதை ஆய்வு செய்து ஏதாவது உபகரணங்கள் காலாவதி ஆகி இருந்தால் அதனை மாற்றும் வழக்கம் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.

அதுதான் தற்போது மேற்கொள்ளப்பட்டது. தமிழக காவல்துறையில் பழைய தொழில் நுட்பங்களை எல்லாம் பின்பற்றவில்லை. நம்மிடம் இருந்து மற்றமாநிலங்கள் எல்லாம் கேட்டு வாங்குகின்றனர் என்றால் பழைய தொழில்நுட்பம் இருந்தால் எல்லாம் வாங்க மாட்டார்கள் அல்லவா. நவீன தொழில்நுட்ப கருவிகளை தான் வைத்திருக்கிறோம். பிரதமர் வருகையின் போது பாதுகாப்பு குறைபாடு என்று எஸ் பி யிடம் இருந்து எவ்விதமான தகவலும் குற்றச்சாட்டும் இல்லை என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

Categories

Tech |