இங்கிலாந்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும் கொரோனாவால் பலி எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. எனவே தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இங்கிலாந்து அரசு கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமலுக்குக் கொண்டு வந்துள்ளது. இந்த நிலையில் பிரதமர் போரிஸ் ஜான்சன் முதல் ஊரடங்கின் போது விதிமுறைகளை மீறி பிறந்தநாள் விழா ஒன்றில் கலந்து கொண்டார்.
பிரதமரின் இந்த செயலானது மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மேலும் எதிர்க்கட்சியினர் பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவியை விட்டு விலக வேண்டும் வலியுறுத்தினர். இதையடுத்து பிரதமர் போரிஸ் ஜான்சன் நாடாளுமன்றத்தில் பகிரங்க மன்னிப்பு கேட்டார். ஆனால் எதிர்கட்சி தலைவர்கள் போரிஸ் ஜான்சனின் மன்னிப்பை கடுமையாக விமர்சித்தனர். இந்த நிலையில் லண்டன் காவல்துறையினர் ஊரடங்கு வேளையில் விருந்து நிகழ்ச்சிகள் நடத்தியது பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்