தமிழ்நாட்டை பறைசாற்றும் அலங்கார ஊர்திகள் குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்கு முதல் முறையாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு பரபரப்பு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் தமிழ்நாட்டிலிருந்து நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட ராணி வேலுநாச்சியார், மருது சகோதரர்கள், வ.உ.சி மகாகவி பாரதியார் உள்ளிட்ட விடுதலை போராட்ட வீரர்களின் உருவங்கள் அடங்கிய ஊர்தி குடியரசு தின அணிவகுப்பில் இடம் பெறுவது மறுக்கப்பட்டிருப்பது பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது.
எனவே பிரதமர் மோடி இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு தமிழ்நாட்டின் பங்களிப்பு விடுதலை போராட்ட வரலாற்றில் இடம் பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.