இலங்கை பிரதமரை தவிர மற்ற அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்வதற்கு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலை வருகிறது. இதனால் மக்கள் உணவு மற்றும் எரி பொருட்களுக்காக நீண்ட வரிசையில் நிற்கும் சூழல் உருவாகியுள்ளது. இந்த கடுமையான பொருளாதார நெருக்கடியினால் அந்நாட்டு மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த பொருளாதார நெருக்கடியினால் பொது மக்கள் வீதியில் இறங்கி அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இதனால் இலங்கையில் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து இலங்கை பிரதமரான மஹிந்த ராஜபக்சேவின் மகனும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சருமான நமல் ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாக தெரிவித்துள்ளார். இதற்கிடையே பிரதான எதிர்க் கட்சியை சேர்ந்த எம்.பிக்கள் நேற்று கொழும்பு நகரில் ஊரடங்கு விதியை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
இந்நிலையில் நள்ளிரவு வரை நீடித்த அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவு ஒன்று எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இலங்கை பிரதமரான மஹிந்த ராஜபக்சவை தவிர மற்ற அமைச்சர்கள் அனைவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்வதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.