கீழ்க்கண்ட செயலை சரியாக செய்வதன் மூலம் பிரதமர் மோடியிடம் பாராட்டைப் பெறலாம்.
இந்திய மக்களை நேர்மையாக வரி செலுத்த வைப்பதற்கான பல்வேறு முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், மத்திய அரசு வெளிப்படையான வரி விதிப்பு, நேர்மையாளர்களை கௌரவித்தல் எனப்படும் புதிய தளத்தை அறிமுகம் செய்கிறது. இந்த தளத்தை பிரதமர் மோடி இன்று துவக்கி வைத்து நேர்மையாக வரி செலுத்துபவர்கள் ஊக்குவிக்கிறார்.
இதன் மூலம் யாரும் வரி செலுத்த மறுத்து பணத்தை பதுக்கி வைக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையிலேயே இந்த தளம் செயல்படுத்தப்படுகிறது. கடந்த ஆண்டு வர்த்தக வரி 30 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக குறைக்கப்பட்டதுடன், வருமான வரி கணக்கை தாக்கல் செய்யும் முறையும் எளிமையாக பட்டது. இந்தியாவின் வளர்ச்சி என்பது அனைவரும் நேர்மையாக வரி செலுத்தினால் மட்டுமே சாத்தியமாகும் என்பதால், அவர்களை வரி செலுத்த வைப்பதற்கான முயற்சிகளில் இது சிறந்த முயற்சியாக பார்க்கப்படுகிறது.