பிரபலமான நடிகர் தன்னுடைய வீட்டில் தேசியக்கொடியை ஏற்றி வைத்துள்ளார்.
இந்தியாவில் வருகிற ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட இருக்கிறது. இதை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் மத்திய அரசாங்கத்தால் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இல்லம் தோறும் தேசியக்கொடி என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் படி சுதந்திர தின விழாவை முன்னிட்டு 3 நாட்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
அதன்பிறகு சமூக வலைதள பக்கங்களில் முகப்பு பக்கத்திலும் தேசிய கொடியின் புகைப்படத்தை வைக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தன்னுடைய வீட்டில் தேசியக்கொடியை ஏற்றியது போன்று, தற்போது தளபதி விஜய்யும் வீட்டில் தேசிய கொடியை ஏற்றி வைத்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.