மக்களுக்கு ரூபாய் 15 லட்சம் தருவதாக பிரதமர் மோடி கூறியதை நிரூபித்தால் அரசியலை விட்டு நான் விளக்குகிறேன் என்று பாஜக மூத்த தலைவர் எச் ராஜா சவால் விடுத்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் “பிரதமர் மோடி அவர்கள் ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூபாய் 15 லட்சம் போட வேண்டும் என்று அமைச்சர் பெரியகருப்பன் கூறுகிறார். அவர் பிரதமர் கூறியதை சரியாக புரிந்து கொள்ளவில்லை. கருப்பு பணத்தை மீட்டால் தான் மக்களின் வங்கிக் கணக்கில் 15 லட்சம் செலுத்த முடியும் என்றுதான் பிரதமர் கூறியுள்ளார்” என்று தெரிவித்தார்.
Categories