அமெரிக்கா தனக்கு எதிராக செயல்படுவதாக இம்ரான்கான் கூறிய குற்றச்சாட்டில் முற்றிலும் உண்மை இல்லை என வெள்ளை மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ள நிலையில், பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசு மீது வருகிற 3ஆம் தேதி வாக்கெடுப்பு நடைபெற இருக்கிறது. இந்த வாக்கெடுப்பில் பெரும்பான்மை நிரூபிக்கப் படவில்லை என்றால் இம்ரான்கான் அரசு கவிழும் நிலை உருவாகியிருக்கிறது. இந்த சூழ்நிலையில் அந்த நாட்டு மக்களிடையே உரையாற்றிய இம்ரான்கான் “நான் 20 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடிய போது இந்த உலகமும், என்னுடன் கிரிக்கெட் விளையாடியவர்களும் நான் கடைசி பந்து விளையாடிய நிகழ்வை பார்த்துள்ளார்கள். என் வாழ்வில் நான் ஒருபோதும் தோல்வியை ஏற்றுக் கொண்டது கிடையாது. நான் வீட்டில் முடங்கி விடுவேன் என ஒருவரும் நினைத்து விடக்கூடாது. முடிவு எதுவாக இருந்தாலும் நான் திரும்பவும் வலிமையுடன் வருவேன்”.
இந்நிலையில் இந்த பேச்சின் போது இம்ரான்கான் வெளிநாடு ஒன்று எங்களுக்கு செய்தி ஒன்றை அனுப்பி உள்ளது. அதில் இம்ரான்கான் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் இல்லை எனில் அந்நாடு அதிகம் பாதிக்கப்படும் என கூறியிருந்தது. இந்நிலையில் நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றினால் பாகிஸ்தான் மன்னிக்கப்படும். இல்லையெனில் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அதில் கூறப் பட்டது என அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக மார்ச் 8ஆம் தேதி அல்லது மார்ச் 7ஆம் தேதிக்கு முன் அமெரிக்கா எங்களுக்கு அனுப்பிய என கூறி நிறுத்தி, பின் அமெரிக்கா அல்ல ஒரு வெளிநாடு எங்களுக்கு செய்தி ஒன்றை அனுப்பியுள்ளது.
மேலும் இதைப்பற்றி நான் பேசுகிறேன் என்றால் ஒரு சுதந்திர நாடு இதுபோன்ற செய்தியை பெருகிறது. இது எனக்கு மற்றும் நாட்டிற்கும்எதிரானது என அவர் கூறியுள்ளார். இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் கருத்து குறித்து வெள்ளை மாளிகை தகவல்தொடர்பு இயக்குனர் கூறுகையில் அந்தக் குற்றச்சாட்டில் முற்றிலும் உண்மை இல்லை என அவர் கூறியுள்ளார்.