பிரிட்டனில் கொரோனாவை போரிஸ் ஜான்சன் கையாண்ட விதம் ஏமாற்றமளித்ததாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
பிரிட்டனின் பிரதமர் போரிஸ் ஜோன்சன் கொரோனாவை கையாண்ட விதம் குறித்து விமர்சனம் அதிகரித்துவருகிறது. இதனிடையே கடந்த ஜனவரி 6-ஆம் தேதி முதல் 7ம் தேதி வரை சுமார் 2003 நபர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. இதில் பதிலளித்து நபர்களில் குறைந்தது 43% பேர் பிரதமர் பதவியிலிருந்து போரிஸ் ஜான்சன் விலக வேண்டும் என்று விரும்பியுள்ளார்கள். அதே நேரத்தில் 40% பேர் அவர் பதவியில் இருக்க வேண்டுமென்று விரும்பியுள்ளார்கள். மேலும் கன்சர்வேட்டிவ் வாக்காளர்களை பொறுத்தமட்டில் 87 % பேர் போரிஸ் ஜான்சன் தொடர்ந்து அவரின் கடமைகளை சிறப்பாக செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் 7% பேர் மட்டுமே பிரதமர் பதவியிலிருந்து அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். மேலும் பிரதமரின் ஒட்டுமொத்த ஒப்புதலுக்கான மதிப்பீடு தற்போது 37% உள்ளது. முந்தைய கணக்கெடுப்புகள் உடன் ஒப்பிடும் போது தற்போது ஒரு புள்ளி சரிந்துள்ளது. மேலும் கணக்கெடுப்புகளின் அடிப்படையில் சுமார் 40% பேர் பிரதமராக போரிஸ் ஜான்சன் பணியாற்றுவதை விரும்பவில்லை. மேலும் இது முந்தைய கருத்துக் கணிப்பில் இருந்து ஒரு புள்ளி உயர்ந்துள்ளது. இவர்கள் கொரோனாவை போரிஸ் ஜான்சன் கையாண்ட விதம் ஏமாற்றம் அளித்துள்ளதாக கூறியுள்ளனர். அதே சமயத்தில் 30% பேர் நெருக்கடியான சூழலிலும் சிறப்பான நடவடிக்கையை எடுத்துள்ளதாக பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.