Categories
உலக செய்திகள்

“பிரதமர் பதவி விலக வேண்டும்!”…. கொந்தளித்த நாட்டு மக்கள்…. பெரும் பரபரப்பு….!!!!

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த 2020-ஆம் ஆண்டு மே மாதம் கொரோனா முதல் அலையால் ஊரடங்கு அமலில் இருந்த போது லண்டன் டவுனிங் வீதியில் மது விருந்தில் கலந்து கொண்டார். இது குறித்த தகவல் வெளியாகி பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அதோடு மட்டுமில்லாமல் அரசியல்வாதிகளும், மக்களும் பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது கோபப்பட்டனர். இதையடுத்து அவருடைய கன்சர்வேடிவ் கட்சியிலேயே மக்களின் இந்த கோபத்தை தணிக்க முடியாவிட்டால் பிரதமர் பதவி விலக வேண்டும் என்று எதிர்ப்பு எழுந்தது.

இந்நிலையில் முதல் முறையாக பிரதமர் போரிஸ் ஜான்சன் நாடாளுமன்ற கீழ்சபையில் பேசிய போது தவறை ஒப்புக்கொண்டு மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுள்ளார். அதனை தொடர்ந்து பேசிய அவர் அந்த மது விருந்து ஒரு வேளை நிகழ்வு மட்டுமே என்று கூறினார். அதனை ஏற்க முடியாத எதிர்க்கட்சி தலைவர் கெய்ர் ஸ்டார்மர், போரிஸ் ஜான்சன் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினார். இதனால் நாடாளுமன்ற கீழ் சபையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Categories

Tech |