Categories
உலக செய்திகள்

பிரதமர் பரபரப்பு புகார்…! போட்டுடைத்த நெருக்கமானவர்… வசமாக சிக்கிய போரிஸ் ஜான்சன் …!!

இங்கிலாந்து நாட்டின் பிரதமர் குடியிருப்பை புதுப்பிப்பதற்கு பிரதமர் எவ்வாறு நிதியளித்தார் என்பதை விசாரணை செய்ய வேண்டுமென்று எதிர்க்கட்சியினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

இங்கிலாந்து பிரதமரான போரிஸ் ஜான்சனுடைய முக்கிய ஆலோசகர் பதவியிலிருந்த டோமினிக் கம்மிங் பதவியிலிருந்து கடந்தாண்டு விலகினார். இந்த நிலையில் பிரதமருடைய தனிப்பட்ட பேச்சுவார்த்தைகளான, பிரதமர் மாளிகை புதுப்பித்த செலவு விவரங்களும், கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் வெண்டிலேட்டர் குறித்த கருத்துகளும் வெளியே வந்ததற்கு தான் பொறுப்பல்ல என்று டோமினிக் கம்மிங் அலுவலகத்தில் கூறியுள்ளார்.

மேலும் டோமினிக் கம்மிங் நன்கொடையாக வழங்கப்பட்ட பணத்தை பிரதமருடைய குடியிருப்பை புதிப்பிக்க போரிஸ் ஜான்சன் போட்ட திட்டம் சட்ட விரோதமானவை மற்றும் முட்டாள்தனமானவை என்று அவரிடமே கூறியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் போரிஸ்ஸும், அவருடைய அலுவலகமும் நேர்மையையும், நம்பகத்தன்மையையும் இழந்து விட்டது என்றும் கூறினார். இதற்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிரதமர் அலுவலகம் சில கருத்தை வெளியிட்டது.

அதாவது பிரதமருடைய மாளிகை சட்டப்படிதான் புதுப்பிக்கப்பட்டது என்றும், அதற்கான தகவல் வெளிவந்த விசாரணையில் பிரதமர் குறுக்கிடவில்லை என்றது. இதனையடுத்து கம்மிங்கினுடைய பேச்சையொட்டி இங்கிலாந்து எதிர்க்கட்சி, பிரதமர் நிதியளித்த பிரச்சனை நேர்மையை சார்ந்தது, மிகவும் முக்கியமானது, எனவே இதனை விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தது.

Categories

Tech |