முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையில் ஹரியானாவில் பாஜக ஆட்சி நடத்தி வருகிறது. இந்நிலையில் 2023 ஆம் வருடம் மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த சூழ்நிலையில் ஹரியானாவில் பாஜக கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் ராவ் இந்தர்ஜித் சிங், பிரதமர் நரேந்திர மோடியின் ஆசி நமக்கு இருக்கிறது. ஆனால் நம்முடைய மாநிலத்தில் அவர் பெயர் மட்டுமே வைத்து நமக்கு வாக்குகள் கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. வாக்காளர்கள் பிரதமரின் பெயரில் வாக்களிப்பது நம் நோக்கமாக இருக்கும்.
ஆனால் வாக்குகள் பதிவானதை உறுதிசெய்வது அடித்தளத்தில் இருக்கும் பாஜக தொண்டர்கள் பொறுத்து. மோடியால் தான் பாஜகவால் மத்தியில் ஆட்சி அமைக்க முடிந்தது என்று ஒத்துக் கொள்கிறோம் ஹரியானாவில் முதல் முறையாக அரசு ஆட்சி அமைத்தது அது இரண்டாவது முறையும் நடந்தது ஆனால் வழக்கமாக மற்றொரு கட்சிக்கு வாய்ப்பு கிடைக்கிறது முதல் முறை 90 தொகுதிகளில் 47 இடங்களில் வெற்றி பெற்ற இரண்டாவது முறை 40 இடங்களில் வெற்றி பெற்ற இது போன்ற சந்தர்ப்பங்களில் வெற்றி வீதம் என்பது சாதாரணமானது என திருத்தப்பட்டது ஆனால் அந்த நாற்பத்தி ஐந்து இடங்களில் நம்மால் தக்க வைத்துக்கொள்ள முடியுமா என்பதுதான் நாம் சிந்திக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.