இந்தியா அமெரிக்க கூட்டு பயிற்சி மாநாடு மற்றும் இந்து பசுபிக் பொருளாதார திட்டங்களுக்கான அமைச்சர்கள் அளவிலான கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மந்திரி பியூஸ் கோயல் அமெரிக்கா பயணம் மேற்கொண்டு இருக்கின்றார். இந்த நிலையில் அங்குள்ள சான் பிரான்சிஸ்கோ மற்றும் லாஸ் ஏஞ்சல் மாகாணங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்ள இருக்கின்றார். முன்னதாக சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் அமெரிக்காவில் ஆறு பகுதிகளில் உள்ள இந்திய பட்டய கணக்காளர் நிறுவனத்தை தொடங்கி வைத்துள்ளார். அதில் பேசிய அவர் உலகம் முழுவதும் உள்ள பட்டய கணக்காளர் பிராண்ட் இந்தியாவின் தூதர்களாக செயல்பட வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கின்றார். இதனை தொடர்ந்து கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.
அப்போது கடந்த எட்டு வருடங்களாக நான் பிரதமர் மோடி தலைமையிலான அரசின் கீழ் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். பிரதமர் மோடியின் செயல்பாடுகள் ஆழமான நிர்வாக கொள்கைகளை கொண்டிருக்கிறது என தெரிவித்துள்ளார். அதற்கு உதாரணமாக உஜாலா திட்டத்தின் கீழ் எல் இ டி பல்புகளுக்கான நிலையான மற்றும் மிகப்பெரிய சந்தை மதிப்பு ஏற்பட்டுள்ளது என கூறியுள்ளார். இந்த நிலையில் பிரதமர் மோடியின் ஒப்பற்ற நிர்வாக திறன் காரணமாக இந்தியாவில் led பல்புகளுக்கான சந்தை விரிவு படுத்தப்பட்டு அதன் சில்லறை மதிப்பு விலை குறைய வழி வகுத்துள்ளது என தெரிவித்துள்ளார்.