தேசிய பாதுகாப்பு கவுன்சில் பிரதமர் மோடியின் தலைமையில் செயல்பட்டு வருகிறது. இந்த கவுன்சில் வெளிப்புற மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு குறித்து அனைத்து பணிகளையும் செய்து வருகிறது. தற்போது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இந்தியாவின் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக விக்ரம் மிஸ்ரி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் சீனாவுக்கான இந்திய தூதர் ஆக 3 ஆண்டுகள் பணியாற்றினார். அதன் பிறகு இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கீழ் பல்வேறு முக்கிய பொறுப்புக்களில் பதவி வகித்துள்ளார். மேலும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் தனி செயலாளராகவும் பணியாற்றி வருகிறார்.