பஞ்சாபில் நடைபெறவிருந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஹெலிகாப்டரில் வருவதாக கூறியிருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் சாலை மார்க்கமாக செல்ல முடிவு செய்தார். இந்நிலையில் நரேந்திர மோடியின் கான்வாய் பஞ்சாபில் நடைபெற்ற போராட்டத்தின் காரணமாக 20 நிமிடம் நிறுத்தப்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
எனவே பஞ்சாப்பில் பிரதமர் மோடியின் பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடுகளைப் பற்றி நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெறவிருக்கிறது. வழக்கறிஞர் மனிந்தர் சிங்கின் முறையீட்டை ஏற்று வழக்கை நாளை விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவம் நடக்காத வகையில் உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.