வருகின்ற மே மாதம் ஜப்பானின் டோக்கியோ நகரில் குவாட் உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நான்கு நாடுகள் பங்கேற்கின்றன. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வருகின்ற மே 20 முதல் 24 வரை ஜப்பான் மற்றும் தென் கொரியாவிற்கு பயணம் மேற்கொள்கிறார். இந்த நிலையில் அடுத்த மாதம் ஜப்பானில் நடைபெற உள்ள உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பங்கேற்பார் என்று வெள்ளை மாளிகை தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்கும் ஜோ பைடன் இந்திய பிரதமர் மோடியை சந்தித்து பேசுவார். இந்த சுற்றுப்பயணம் இந்தோ- பசிபிக் பகுதிக்கான பைடன்- ஹாரிஸ் நிர்வாகத்தின் உறுதிப்பாட்டை முன்னேற்றம் அடைய செய்யும் வகையில் அமையும் என்றும் வெள்ளை மாளிகை செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.