Categories
தேசிய செய்திகள்

பிரதமர் மோடியை நேரில் சந்தித்த தமிழக கவர்னர்… தமிழக அரசியல் பற்றி விளக்கம்…!!!

டெல்லி புறப்பட்டுச் சென்ற தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பிரதமர் நரேந்திர மோடியை அவரின் இல்லத்தில் சென்று நேரில் சந்தித்து பேசினார்.

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று திடீரென டெல்லி பயணம் புறப்பட்டு சென்றார். அவர் அங்கு வெள்ளிக்கிழமை வரையில் தங்கியிருந்த ஜனாதிபதி, பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை நேரில் சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் அவர் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கின்ற ஏழு தமிழர்கள் விடுதலை பற்றியும், தமிழ்நாட்டின் அரசியல் சூழல் எப்படி இருக்கிறது என்றும் பிரதமரிடம் கவர்னர் கூறினார். இதனைப் போலவே உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் உள்துறை செயலாளரை நேரில் சந்தித்து கவர்னர் பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |