ஜெர்மனியில் உள்ள ஸ்கிளாஸ் நகரில் 48 வது ஜி7 மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் விடுத்த அழைப்பை ஏற்றுக்கொண்டு பிரதமர் மோடி மாநாட்டில் கலந்து கொண்டார். பிரதமர் மோடி வெளிநாடுகளில் நடக்கின்ற மாநாட்டில் அவர் கலந்துகொள்ளும் போதுதான் சந்தித்து பேசிய தலைவர்களுக்கு இந்தியாவின் செழுமையான கலாச்சாரம், பாரம்பரியம் பிரதிபலிக்கிற பரிசுகள் வழங்குவது வழக்கமாக கொண்டுள்ளார். அதன்படி ஜி7 மாநாட்டின் போது பிரதமர் மோடி தான் சந்தித்த தலைவர்களுக்கு வழங்கிய நினைவு பரிசுகளின் தொகுப்பை பார்ப்போம்.
- அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு பிரதமர் மோடி தனது வாரணாசி தொகுதியில் புவிசார்குறியீடு பெற்ற குலாபி மீனகாரி கலைப்பொருள், கப்லிங் செட் மற்றும் ப்ரூச ஆகியவற்றை பரிசாக வழங்கினார்.
- ஜெர்மனி பிரதமர் ஒலாப் ஸ்கோல்சுக்கு மொரதாபாத்தின் தலைசிறந்த கலைப்படைப்பாக கருதப்படுகிற மட்கா கலைப்பொருளை கொடுத்தார்.
- ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவுக்கு நிஜமாபாத்தின் கருப்பு மண்பாண்ட செட்டுகளை பரிசாக தந்தார். * இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு பிளாட்டின பூச்சு கொண்ட ‘டீ செட்’டை பரிசாக கொடுத்தார்.
- பிரான்ஸ் அதிபர் மேக்ரானுக்கு உ.பி. தலைநகர் லக்னோவில் தயாரிக்கப்பட்ட பெட்டியில் இயற்கை மூலங்களில் இருந்து தயாரிக்கப்பட்ட வாசனைத் திரவிய பாட்டில்களை வைத்து பரிசாக கொடுத்தார்.
- இத்தாலி பிரதமர் மரியோ டிராகிக்கு சலவைக்கல்லில் தயாரிக்கப்பட்ட கலைப்பொருட்கள் வழங்கப்பட்டது.
- செனகல் அதிபர் மேக்கி சாலுக்கு கைவினைப் பொருளான ‘மூன்ச்’ கூடைகளும், பருத்தி தரை விரிப்புகளும் பரிசாக கொடுக்கப்பட்டன.
- இந்தோனேசியாவின் அதிபர் ஜோகோ விடோடோவுக்கு ‘ராம்தர்பார்’ பரிசாக வழங்கப்பட்டது. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு டோக்ரா கலைப்பொருட்கள் வழங்கப்பட்டது.
- தென் ஆப்பிரிக்காவின் அதிபர் சிரில் ராமபோசாவுக்கும், அர்ஜென்டினா அதிபர் ஆல்பர்டோ பெர்னாண்டசுக்கும் டோக்ரா கலைப்பொருட்களை பிரதமர் மோடி பரிசாக கொடுத்தார்.