பிரதமர் நரேந்திர மோடியின் சொத்து மதிப்பு குறித்த விவரங்களை பிரதமர் அலுவலகம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதன்படி மொத்த சொத்து மதிப்பு 2.23 கோடி ரூபாய் பெரும்பாலான சொத்து வங்கி டெபாசிட் தொகையாக உள்ளது. இதுபோக அசையா சொத்துக்கள் ஏதுமில்லை. குஜராத் தலைநகர் காந்தி நகரில் இருந்த தன்னுடைய நிலத்தை பிரதமர் மோடி நன்கொடையாக வழங்கி விட்டதாக கூறப்படுகிறது. பங்குகள், மியூச்சுவல், ஃபண்ட் பத்திரங்கள் போன்ற சொத்துக்களை முதலீடு செய்யவில்லை.
2022 மார்ச் 31 வரை பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு 2,23,82,504. இது கடந்தாண்டுடன் ஒப்பிடும்போது 26.13 லட்சம் அதிகமாகும். மேலும், 1.74 லட்சம் மதிப்புள்ள 4 தங்க மோதிரங்கள், கையில் 32,250 ரொக்கப்பணம், தேசிய சேமிப்பு சான்றிதழில் 79,05,105 வைத்துள்ளார். 1,89,305 மதிப்புள்ள ஆயுள் காப்பீடு பாலிசிகள் வைத்துள்ளார்.