Categories
மாநில செய்திகள்

பிரதமர் மோடி தமிழகம் வருகை… போக்குவரத்து திடீர் மாற்றம்…!!!

திருப்பூர் மாவட்டம் தாரப்புரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நாளை நடைபெறும் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இரண்டு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இதற்கு மத்தியில் தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக அனைத்து கட்சிகளும் போட்டிப் போட்டுக் கொண்டு பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகிறது. அதுமட்டுமன்றி ஒவ்வொரு கட்சியும் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் மக்களை கவரும் வகையிலான பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும் ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் போட்டியிடும் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தனர். அந்த வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மக்களை நேரில் சந்தித்து ஓட்டு சேகரிக்கும் பணியில் அனைத்து கட்சியினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் நாளை பிரதமர் மோடி பரப்புரைக்காக தமிழகம் வர இருக்கிறார். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே நாளை காலை 11.30 அளவில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் மோடி பங்கேற்க உள்ளார். இதனால் அப்பகுதியில் காவல்துறையின் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு அந்த பகுதியில் சிறிய அளவில் போக்குவரத்து மாற்றம் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பிரச்சார கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தாரபுரம் தொகுதி வேட்பாளர் எல்.முருகன் உட்பட 13 வேட்பாளர்கள் பங்கேற்க உள்ளனர்.மேலும் பிரதமரை தொடர்ந்து, பாஜக சார்பில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் ஆகியோர் பரப்புரைக்காக தமிழகம் வர உள்ளனர்.

Categories

Tech |