Categories
தேசிய செய்திகள்

“பிரதமர் மோடி தோற்று விட்டார்”…. எதற்காக தெரியுமா?…. வெளியான தகவல்…..!!!!!

கர்நாடக சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது, “5 மாநில சட்டசபை தேர்தலுக்காக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை மத்திய அரசு நிறுத்தி வைத்தது. இப்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனை கண்டித்து போராட்டம்மேற்கொள்ள  காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இதையடுத்து சமையல் எரிவாயு விலையும் 50 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது.

மேலும் சமையல் எண்ணெய் உட்பட உணவு தானியங்கள் மற்றும் இரும்பு, சிமெண்டு ஆகியவற்றின் விலையும் அதிகரித்துவிட்டது. இதனால் விலைவாசி உயர்வினை கட்டுப்படுத்தும் முயற்சியில் பிரதமர் நரேந்திர மோடி தோல்வியடைந்துவிட்டார். அதாவது டீசல் விலையானது அதிகரிக்கும்போது உணவு தானியங்கள் உள்பட அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்கிறது. இதன் காரணமாக சாமானிய மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதனால் மத்திய அரசானது பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரிப்பை நிறுத்தவேண்டும்” என அவர் தெரிவித்தார்.

Categories

Tech |