Categories
மாநில செய்திகள்

பிரதமர் மோடி நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும்… மு.க ஸ்டாலின் வாழ்த்து!!

பிரதமர் நரேந்திர மோடியின் 71வது பிறந்த நாளையொட்டி தமிழக முதல்வர் முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இன்று தந்தை பெரியாரின் 143 ஆவது பிறந்த நாள் சமூக நீதி நாளாக கொண்டாடப்படுகின்றது. அதே போல இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியின் 71ஆவது பிறந்த நாளும் இன்று நாடு முழுதும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.. பிரதமர் மோடிக்கு அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியின் 71வது பிறந்த நாளையொட்டி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில்,  பிரதமர் நரேந்திர மோடி நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாள் வாழ வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்..

Categories

Tech |