பிரதமர் மோடிக்கு ஏராளமானோர் பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.
இந்தியாவின் பிரதமரான நரேந்திர மோடி இன்று தனது 72-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனால் இவருக்கு பாஜக கட்சியின் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் மத்திய அமைச்சர்கள், கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழ்நாட்டின் கவர்னர் ஆர். என். ரவி பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து தமிழக மக்களின் சார்பாக தேசத்தின் சேவைகள் நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என வாழ்த்து கூறியுள்ளார்.