சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய ஹெச்.ராஜா, தமிழகத்தில் காவல்துறையினரை விநாயகர் சிலையை தூக்கி செல்வது காவல்துறை அராஜகத்தின் உச்சகட்டம். இந்து மத உணர்வுகளை காயப்படுத்தும் விதமாக நடந்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது. பிற்படுத்தப்பட்ட மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு அகில இந்திய அளவில் 27 சதவீதம் ஒதுக்கிய பிரதமர் மோடி பிறந்த நாள் செப்டம்பர் 17ஆம் தேதி வருகிறது.
அன்று தான் உண்மையான சமூக நீதி நாள் என்று கூறினார். பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17ஆம் தேதியை சமூக சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்திருந்த நிலையில் பிரதமர் மோடி பிறந்த தினமே உண்மையான சமூக நீதிநாள் என்று எச்.ராஜா புது விளக்கம் கொடுத்துள்ளார்.