இந்தியாவில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு ,பிரதமர் மோடி இன்று மாநில முதலமைச்சர்களுடன் காணொளி வாயிலாக கலந்துரையாடினார்.
பிரதமர் மோடி இன்று அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் கலந்துரையாடினார்.அவர் கூறும்போது ,கடந்த சில நாட்களாகவே இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் குறிப்பாக மகாராஷ்டிரம், குஜராத் ,கர்நாடகா ,தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் தாக்கம் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்தத் தொற்று இரண்டாவது அலையின் தாக்கம் என்று கூறினார் . இதேபோன்று சென்ற ஆண்டில் இந்தியாவில் மார்ச் மாத தொடக்கத்திலிருந்து கொரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கியது. இதன் காரணமாக நாடு முழுவதும், முழு ஊரடங்கு அமர்வு செயல்படுத்தப்பட்டது. இதன் மூலம் நாட்டில் கொரோனா தொற்று ஓரளவு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இந்த நோய்க்கான தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு, தற்போது தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதனால் பிரதமர் மோடி அடிக்கடி மத்திய, மாநில அரசுகளுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை முறையையும், தடுக்கும் வழிமுறை மேற்கொண்டு வருகின்றார். ஆனால் தற்போது இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதேசமயம் தடுப்பூசி பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த வகையில் 60 வயது மற்றும் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு இந்தியாவின் தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது .
ஆனால் இந்தத் தொற்று வட இந்தியாவில் குறிப்பாக குஜராத் ,மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் வேகமாக பரவி வருவதால் அங்கு இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பிரதமர் மோடி, இன்று அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தியதில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட இடங்களை தனிமைப்படுத்துவதற்கான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தலைவர்களிடம் தெரிவித்தார் .இந்தியாவில் அவற்றின் வேகம் குறைந்த நிலையில் கடந்த 12 நாட்களாக தொற்றது அதிகரித்து காணப்படுவதால், பிரதமரின் கலந்துரையாடல் இச்சமயத்தில் முக்கியமானதாக கருதப்படுகிறது.