வகுப்புவாத வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தமிழக முதலமைச்சர் மு. க ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி உள்பட 13 எதிர்கட்சித் தலைவர்கள் சேர்ந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் சமுதாயத்தில் ஒரு பிரிவினர் மதம் மற்றும் மொழியை பயன்படுத்தி வன்முறையை தூண்டுகின்றனர். நாட்டின் பல இடங்களில் நடைபெற்ற வகுப்புவாத வன்முறையை கண்டிக்கிறோம். மக்களை மத ரீதியாக பிரித்தாளும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது.
இந்த முயற்சியை முறியடிக்க மக்கள் அமைதி காக்க வேண்டும். இந்நிலையில் நாட்டில் கலவரத்தை தூண்டும் விதமான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது கவலை அளிக்கிறது. சமுதாயத்தில் மத ரீதியான வன்முறையை தூண்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் பிரதமர் மோடி வகுப்புவாத பிரச்சினைகளை தூண்டுபவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் காப்பது அதிர்ச்சி அளிக்கிறது. மேலும் சமுதாயத்தின் ஒற்றுமைக்காக அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.