Categories
மாநில செய்திகள்

பிரதமர் மோடி வருகை… அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை… அரசு திடீர் அறிவிப்பு…!!!

புதுச்சேரியில் பிரதமர் வருகையை ஒட்டி நாளை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. அதன் காரணமாக மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. பெரும்பாலும் கல்லூரிகளும் முழுமையாக திறக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. புதுச்சேரி நகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம் காரணமாக நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி வருகையை ஒட்டி புதுச்சேரி நகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

Categories

Tech |