Categories
மாநில செய்திகள்

பிரதமர் மோடி வேண்டுகோள்…… “தளபதி விஜய் மக்கள் இயக்க”….. அலுவலகத்தில் தேசிய கொடி…!!

சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்கம் அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டுள்ளது.

75 ஆவது சுதந்திர தின விழா நாடு முழுவதும் ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இதனை ஒட்டி நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில்  13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை 3 நாட்கள் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் மற்றும் சமூக வலைதளங்களான பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றில் முகப்பு படங்களை தேசியக்கொடியாக மாற்றி வைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்து இருந்தார்.

அதன்படி சினிமா பரபலங்கள், விளையாட்டு வீரர்கள் உட்பட பலரும் தங்களது சமூக வலைதள பக்கங்களில் தேசிய கொடியை வைத்து வருகின்றனர்.. அதேபோல வீடுகளிலும் தேசிய கொடி ஏற்றி வருகின்றனர்.. இந்நிலையில் சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்கம் அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டுள்ளது. முன்னதாக நடிகர் ரஜினி, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் தங்களது வீடுகளில் தேசிய கொடி ஏற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |