செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, இந்தியாவில் பிரதமராக பதவி வகித்த எவரும் தமிழருடைய பெருமையை, தமிழருடைய கலாச்சாரத்தை இந்த அளவிற்கு எடுத்து பேசியதாக வரலாறு இல்லை. எனவே அப்படிப்பட்ட புதிய வரலாறு படைக்கின்றவர், தமிழக மக்களுடைய கலாச்சாரங்கள், தமிழக மக்களுடைய தொன்மையை இன்றைக்கு உலகமெங்கும் பறைசாற்றிக் கொண்டிருக்கிறார் பாரதப் பிரதமர் அவர்கள் பொங்கல் தினத்தில் வருகிறார் என்றால் தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியும், சந்தோஷமும் இருக்க கூடியது.
பாரத பிரதமரை பொறுத்தவரை தமிழில் இருக்கின்ற முக்கியமான வார்த்தைகள், திருக்குறள் எடுத்தாலும் சரி அல்லது புறநானூற்றில் இருக்கின்ற நல்ல வரிகளை எடுத்து அது ஐநா சபை, உலக சபையில் கூட பேசுகிற பாக்கியத்தை பெற்றிருக்கின்றோம் நாம். இப்படிப்பட்ட பிரதமரை நாம் வாழ்த்தி வரவேற்க வேண்டும் என்பதே எங்களுடைய எண்ணம்.
இதே நேரத்தில் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும், திராவிட முன்னேற்ற கழகம் இதற்கு முன்பாக…. பிரதமர் நல்ல திட்டங்களை தொடங்கி வைக்க வரும்போதெல்லாம் திமுக ஆர்ப்பாட்டம், போராட்டம், கறுப்புக்கொடி காட்டுதல் என்று சொல்லி மக்களை துன்புறுத்திக் கொண்டிருந்தார். இன்றைக்கு அவர்களே வரவேற்கிறார் என்றால் இன்றைக்கு அவருடைய நிலையை தமிழக மக்கள் புரிந்துகொள்ள கொள்வர் என்று நினைக்கிறேன். ஆளுகின்ற போது ஒரு நிலை, எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலை என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள் என்ற திமுகவை மக்கள் புரிந்து கொள்வார்கள் என்று நினைக்கிறேன்.