பிரதமரின் வருகையை முன்னிட்டு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் விளையாட்டுப் போட்டியின் தொடக்க விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இதற்காக அவர் சென்னை வருகிறார். பிரதமரின் வருகையை முன்னிட்டு சென்னை முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸ், ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் அந்த பகுதியை சுற்றி பூக்கடை, பெரிய மேடு போலீசார் என ஏராளமான காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்கள் உதவியோடு சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ரயில் நிலையத்திற்குள் வரும் பயணிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே ரயில் நிலையத்திற்கு செல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.