இந்தியாவிற்கு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் வருகை ரத்து செய்யப்பட்டதால் மத்திய அரசு நிம்மதி அடைந்து உள்ளது.
இந்தியாவின் 72வது குடியரசு தினத்துக்கு சிறப்பு விருந்தினராக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் வருவதாக தகவல் வெளியாகியது. ஆனால் உள்நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அவசர நிலை காரணமாக நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாது என்று அவர் கூறிவிட்டார். இதற்கு மத்தியில் டெல்லியில் 40 நாட்களுக்கு மேலாக வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால், குடியரசு தினத்தன்று டெல்லியில் மாபெரும் டிராக்டர் பேரணி நடத்தப்படும் என விவசாயிகள் சங்கம் அறிவித்து இருந்தனர். இந்நிலையில் போரிஸ் ஜான்சன் பயணம் ரத்தானது மத்திய அரசுக்கு சற்று நிம்மதி அளிக்கலாம். ஏனெனில் விவசாயிகள் பிரச்சனை சர்வதேச கவனத்தை ஈர்க்கும் சூழல் தவிர்க்கப்பட்டுள்ளது.