வானொலி நிகழ்ச்சிகள் பிரதமர் மோடி திருவண்ணாமலையில் உள்ள நாக நதியை குறிப்பிட்டு உரையாற்றியுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள பிரதான நதியான நாகநதி சில ஆண்டுகளுக்கு முன்பு வரண்டு விட்டது. அதனை மீட்டெடுக்க அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் பெண்கள் பெரு முயற்சி மேற்கொண்ட நிலையில் மீண்டும் நாக நதியில் தண்ணீர் நிரம்பியுள்ளது.
இதுகுறித்து 81வது மண் கி பாத் வானொலி நிகழ்ச்சிகள் பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார். இதுகுறித்த விரிவான விபரம் பின்வருமாறு : “திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓடும் நாகநதி சில ஆண்டுகளுக்கு முன்பு வறண்டு போனது. நதியை மீட்டெடுக்க அப்பகுதி பெண்கள் மேற்கொண்ட பெருமுயற்சியால் இன்று நதியில் தண்ணீர் நிரம்பியுள்ளது. திருவண்ணாமலை நதிகளை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள அனைவரையும் பாராட்டியே ஆக வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.