காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் பாரத் ஜடோ யாத்திரை ராஜஸ்தானில் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் வெளியில் சிங்கம் போல பேசுகிறார் ஆனால் உண்மையில் அவர் உள்ளே எலிபோல செயல்படுகிறார் என்று ஒப்பிட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசினார்.
இந்நிலையில் பிரதமரை இவ்வாறு விமர்சித்து பேசியதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ராஜ்யசபாவில் பாஜகவினர் குழல் எழுப்பினர். ஆனால் பார்லிமென்ட்க்கு வெளியே பேசியதற்கு இங்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று கார்கே திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.