பிரித்தானிய பிரதமர் போட்டிக்கான நடைமுறைகள் சூடுப்பிடிக்கத் துவங்கியுள்ளது போலவே, பிரதமர் வேட்பாளர்களுக்கிடையிலான விவாதங்களும் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளன.
தான் பிரதமரானால் நாட்டுக்கு என்ன செய்வேன் என்று கூறி வாக்கு சேகரிக்கத் துவங்கிய பிரதமர் வேட்பாளர்கள், தற்போது ஒருவரை ஒருவர் நேரடியாகத் தாக்கிப் பேசத் துவங்கியுள்ளார்கள். அந்த வகையில், ரிஷியின் கொள்கைகள், முன்னாள் பிரித்தானிய பிரதமரும், சேன்ஸலருமான Gordon Brown என்பவருடைய கொள்கைகளைப் போல பழங்கால கொள்கைகள் என விமர்சித்திருந்தார்.
அவரை எதிர்த்துப் போட்டியிடும் லிஸ் ட்ரஸ், அதாவது மக்களிடமிருந்து வரி வாங்கி மக்களுக்காக செலவு செய்வதுதான் ரிஷியின் கொள்கை. அது பழங்கால கொள்கை. Gordon Brown அதைத்தான் பின்பற்றினார். ஆனால், மக்கள் தங்கள் பணத்தைத் தாங்களே வைத்திருக்கத்தான் விரும்புகிறார்கள். ரிஷியின் வரி வாங்கி செலவு செய்யும் கொள்கையோ நம்மை பொருளாதார ரீதியில் பின்னோக்கித் தள்ளிவிடும் என்கின்றார். மேலும் லிஸ் ட்ரஸ் ரிஷியை Gordon Brown உடன் ஒப்பிட்டுள்ளது ரிஷி தரப்பினரை எரிச்சலூட்டியுள்ளதால், அவர்கள் லிஸ் ட்ரஸ்ஸை ஒழுக்கம் கெட்டவர் என விமர்சித்துள்ளார்கள். அதாவது லிஸ் ட்ரஸ் ஒழுக்க ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், சரியாக முடிவெடுக்கத் தெரியாதவர் என்று கூறியுள்ளார்கள். இது குறித்து ரிஷி கூறியதாவது, “அவர்கள் போலியான வாக்குறுதிகளைக் கொடுத்து வெற்றி பெறுவதை விட தோல்வியை ஏற்றுக்கொள்வேன்” என்று அவர் கூறியுள்ளார்.