Categories
சினிமா

பிரதாப் போத்தன் மறைவு… “அவர் ஆசைப்பட்டபடியே இறந்து விட்டார்”….. பிரபல நடிகை உருக்கம்….!!!!

தமிழ் சினிமாவில் அழியாத கோலம் படம் அறிமுகமானவர் பிரதாப் போத்தன்(70). இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தியில் 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். இந்தநிலையில் நேற்று சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடியில் குடியிருப்பில் இறந்துவிட்டார். கடந்த சில நாட்களாகவே பிரதாப் போத்தன் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள். மேலும் ரசிகர்கள் பலர் சமூக வலைத்தளம் மூலம் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அதன்படி தமிழ் படங்களில் நடித்துள்ள நடிகை கனிகா நடிகர் பிரதாப் போத்தன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதாப் போத்தனுடன் மலையாளத்தில் சில படங்களில் பணியாற்றி உள்ளேன். மேலும் அவர் நிம்மதியான தூக்கத்திலேயே உயிர் போகனும் என்று சொல்லுவார். அவர் சொன்னபடியே மறந்துவிட்டார் என மிகவும் உறக்கமாக கூறினார்.

Categories

Tech |