கைலாசநாதர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கரிசல்பட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற கைலாசநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று பிரதோஷம் மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இந்நிலையில் கைலாசநாதருக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், இளநீர், திருநீர், தேன் உள்ளிட்ட 11 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த பிரதோஷ பூஜையில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு கைலாச நாதரை தரிசனம் செய்துள்ளனர்.