மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி அருகே புகழ்பெற்ற திருப்பன்கூர் சிவலோகநாதசாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு புரட்டாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு பல்வேறு பொருட்களால் சுவாமி மற்றும் நந்தி பகவானுக்கு அபிஷேகம் நடைபெற்றுள்ளது. இதே போல திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில், கண்ணப்பன் பேட்டை கலிகாமேஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் நந்தி பகவானுக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.
Categories