தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனும் முக்கிய பிரபலமாகவும் ராம் சரண் தற்போது நடித்துள்ள படம் ஆர்ஆர்ஆர். இந்தப் படம் ஜனவரி 7 ஆம் தேதி அன்று திரைக்கு வர உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஆர்ஆர்ஆர் படக்குழுவினர் மட்டுமல்லாமல் தமிழ் நடிகர்கள், உதயநிதி ஸ்டாலின், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், ராஜமவுலியின் மகதீரா படம் வெளியான போது தனக்கு சத்யம் திரையரங்கு மிகவும் பிடிக்கும். அதில் உள்ள பெரிய திரையரங்கில் தன்னுடைய படம் வெளியாக வேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டேன். அப்போது அது நடைபெற்றது. அதேபோன்று இப்போது ஆர்ஆர்ஆர் படத்தை தமிழகத்தில் உள்ள 3 ஏரியாக்களை வாங்கியிருக்கும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் சத்யம் திரையரங்கில் உள்ள 6 ஸ்கிரீன்களில் 5 ஸ்கிரீன்களில் படத்தை வெளியிடுவோம் என உறுதி அளிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.