Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பிரபலமான நகை கடையில் கைவரிசை….. கொள்ளையர்களை கண்டுபிடிப்பதில் சிக்கல்…. போலீஸ் விசாரணை….!!!

நகை கடையை உடைத்து தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் லோகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் புக்கிரவாரி புதூர் பகுதியில் ஸ்ரீ குமரன் ஸ்வர்ண மஹால் என்ற தங்கக் கடையை நடத்தி வருகிறார். இந்த நகை கடையின் பூட்டை சில மர்ம நபர்கள் உடைத்து ரூ. 50,000 பணம், 50 கிலோ வெள்ளி பொருட்கள், 281 பவுன் தங்க நகைகள் போன்றவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது தொடர்பாக காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

இந்நிலையில் நகைக்கடையின் முன்பாக இருந்த கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அருகில் உள்ள கேமராக்களின் இணைப்புகளை துண்டித்ததால் கொள்ளையர்களை கண்டுபிடிப்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் ஒரு வாரத்திற்கு முன்பாக சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை வைத்து சந்தேகப்படும்படியான நபர்கள் யாரிடம் சுற்றி திரிகிறார்களா என்பதை காவல்துறையினர் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |