பத்திரிக்கை ஆசிரியராக பணியாற்றிய பெண் ஒருவர் கார் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவில் உள்ள லண்டன் நகரை சேர்ந்த Saarah Jones (39). இவர் பிசினஸ் லண்டன் என்ற பத்திரிகையின் ஆசிரியராக உள்ளார். இந்நிலையில் சமீபத்தில் காரில் சென்றுகொண்டிருந்த Saarah மீது லாரி ஒன்று வேகமாக மோதியுள்ளது. இதனால் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மேலும் இதுகுறித்து, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பல்வேறு தரப்பினர் Saarahவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் இது குறித்து பிரபல பத்திரிக்கையாளரான Joe rusciti தெரிவிக்கையில் இந்த சமூகத்தின் வலிமைமிக்க ஆதரவாளர் Saarah. மேலும் பன்முகத்தன்மை மற்றும் சமத்துவம் ஆகியவற்றை பற்றி வலிமையான எண்ணம் கொண்டவராக இருந்தார். மேலும் அவரைச் சுற்றி இருப்பவர்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளும் வகையில் பேசும் சுபாவமுடையவர் என்று கூறியுள்ளார்.