ஐஸ்வர்ய லட்சுமி பிரபல இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் கடந்த 2019-ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான ஆக்சன் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஐஸ்வர்ய லட்சுமி . இதை தொடர்ந்து இவர் ஜகமே தந்திரம் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து பிரபலமடைந்தார். தற்போது இவர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் சமீபத்தில் ஐஸ்வர்ய லட்சுமி தனது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளார்.
இந்நிலையில் அவர் தனது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவு செய்துள்ளார். அதில் விஜய் சேதுபதியின் ’96’ படத்திற்கு இசையமைத்து பிரபலமடைந்த கோவிந்த் வசந்தாவுடன் ஐஸ்வர்ய லட்சுமி நெருக்கமாக இருக்கும் புகைப்படமும் உள்ளது. நடிகை ஐஸ்வர்ய லட்சுமியும், கோவிந்த் வசந்தாவும் நெருங்கிய உறவினர்கள் என்று கூறப்படுகிறது.