இந்திய மல்யுத்த வீராங்கனை நிஷா தாஹியா சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ள நிலையில், வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. சர்வதேச அளவில் இந்தியாவிற்கு பல்வேறு பதக்கங்களை வென்று கொடுத்தவர் இவர். கடந்த வெள்ளிக்கிழமை சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி வென்றார். இந்நிலையில் மல்யுத்த வீராங்கனை நிஷா தாஹியாவும் அவரின் சகோதரர் மற்றும் தாயார் ஆகியோர் அரியானா மாநிலம் சோனிபட் ஹலால் பூரியில் உள்ள சுசில்குமார் அகாடமியில் நேற்று பயிற்சிக்காக சென்றுள்ளனர்.அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் அதில் நிஷா தாஹியா மற்றும் அவரது சகோதரர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அதுமட்டுமல்லாமல் அந்த தாக்குதலில் தாய் படுகாயமடைந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் தகவலுக்கு நிஷா தாஹியா மறுப்பு தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நான் சுட்டுக் கொலை செய்யப்பட்டு விட்டேன் என்று பரவும் தகவல் முற்றிலும் பொய்யானது. நான் தற்போது சீன தேசிய அளவிலான தொடருக்காக கோண்டாவில் பயிற்சி பெற்று வருகிறேன். நன்றாக உள்ளேன் என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
#WATCH | "I am in Gonda to play senior nationals. I am alright. It's a fake news (reports of her death). I am fine," says wrestler Nisha Dahiya in a video issued by Wrestling Federation of India.
(Source: Wrestling Federation of India) pic.twitter.com/fF3d9hFqxG
— ANI (@ANI) November 10, 2021