போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானுக்கு வழக்கறிஞராக சதீஷ் மானஷிண்டே என்பவர் ஆஜராகிறார்.
பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் சமீபத்தில் சொகுசு கப்பலில் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களை பயன்படுத்தியதாக போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் இந்தியாவின் மிகப்பெரிய வழக்கறிஞரான சதீஷ் மானஷிண்டே என்பவர் ஆரியன் கானுக்கு ஆதரவாக கோர்ட்டில் ஆஜராகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சதீஷ் மானஷிண்டே மும்பையில் சட்டம் பயின்றவர்.
இந்தியாவின் பிரபலமான வக்கீலான இவர் பாலிவுட் வட்டாரத்தில் முக்கிய புள்ளியாக இருக்கிறார். மும்பை வெடிகுண்டு வழக்கில் சஞ்சய் தத்திற்கு இவர்தான் வக்கீலாக இருந்தார்.மேலும் அவருக்கு ஜாமீனும் பெற்றுக்கொடுத்தார். சதீசை பொருத்தவரை இவர் மும்பையில் மிகப்பெரிய வக்கீலாக இருப்பவர் மற்றும் பிரபலங்களுக்கு நம்பகமான ஒரு நபர். மேலும் இவர் ஒருமுறை ஆஜராவதற்கு 10 லட்சம் வரை வசூலிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.