பிரபல இயக்குனரின் படத்தில் சிம்புவுடன் நடிகை நயன்தாரா நடிக்கவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது .
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் சிம்புவிற்கு ரசிகர் கூட்டங்கள் ஏராளம் . இந்த வருடம் கொரோனா ஊரடங்கு காலத்தை பயன்படுத்தி தீவிரமாக உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைத்து ஆளே மாறிவிட்டார் சிம்பு. அதுமட்டுமல்லாது சமூக வலைத்தள பக்கத்தில் தனது படங்கள் குறித்த தகவல்களையும் தனது புதிய புகைப்படங்களையும் அவ்வப்போது பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார் . இவர் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வருகிற பொங்கலுக்கு திரையரங்கில் வெளியாக உள்ளது . இவர் தற்போது வெங்கட்பிரபுவின் மாநாடு படத்தில் நடித்து வருகிறார் .
இதையடுத்து பத்து தல படத்தில் நடிக்க உள்ளார் . இந்நிலையில் தங்க மீன்கள், பேரன்பு ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ராமிடம் சிம்பு கதை கேட்டுள்ளாராம் . இந்த படத்தில் ஹீரோவை போன்று ஹீரோயின் கதாபாத்திரமும் படம் முழுக்க பயணிக்குமாம் . இந்த கதாபாத்திரத்தில் நடிக்க லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவை படக்குழு அணுகி இருப்பதாக தகவல் கசிந்துள்ளது . மேலும் இந்தப் படத்தில் நடிக்க நடிகர் சிம்பு ஓகே சொல்லிவிட்டால் இது நயன்தாரா-சிம்பு கூட்டணியின் மூன்றாவது படமாக அமையும் . ஏற்கனவே இவர்கள் இருவரும் இணைந்து நடித்த வல்லவன் ,இது நம்ம ஆளு போன்ற படங்கள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது குறிப்பிடத்தக்கது .